தொழிற்சங்கத்தினர் கோரிக்கை பிரசாரம்
தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கை விளக்க பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கை விளக்க பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசைக் கண்டித்து ஜன. 8, 9-களில் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதையொட்டி, பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர், பூலாம்பாடி, வேப்பந்தட்டை, லப்பைகுடிகாடு உள்பட பல்வேறு இடங்களில் சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை விளக்கி, துண்டுப் பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் மேற்கொண்டனர்.
சிஐடியு மாவட்டச் செயலர் ஆர். அழகர்சாமி, எல்.பி.எப் மாவட்டத் தலைவர் ஆர். ரெங்கசாமி, ஏஐடியுசி மாவட்டச் செயலர் வீ. ஞானசேகரன், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில நிர்வாகி எஸ். அகஸ்டின், சங்க பொறுப்பாளர்கள் எ. கணேசன், பி. முத்துசாமி, ஆர். ராஜகுமாரன், செல்வராஜ், கே.கே. குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.