முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே கார் மோதி 2 பேர் சாவு

பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 23 ஜூலை 2018, 8:54 am IST
பகிர்:

பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
சென்னை, பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர், கொடைக்கானலில் படித்துக் கொண்டிருக்கும் தனது மகனை பார்க்க சென்னையிலிருந்து கொடைக்கானலுக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அந்த கார், ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட விஜயகோபாலபுரம் பகுதியில் வந்தபோது, காரின் முன்பக்க டயர் வெடித்து நிலைதடுமாறி சாலையில் தறிகெட்டு ஓடியது.  அப்போது, அந்த பகுதியில் சாலையைக் கடக்க மோட்டார் சைக்கிளில் நின்றுகொண்டிருந்த பெரம்பலூர் அருகேயுள்ள கோனேரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மீனா (22), மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி (25) ஆகியோர் கார் மோதி உயிரிழந்தனர்.  தகவலறிந்த பாடாலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உயிரிழந்த இருவரும் அப்பகுதியில் இயங்கி வரும் தனியார் பால் பண்ணையில் ஊழியர்கள். விபத்து குறித்து பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து, காரை ஓட்டி வந்த ஸ்ரீதரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments