முகப்பு
பெரம்பலூர்

வாகனம் மோதி புள்ளிமான் சாவு

பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் ஒன்று உயிரிழந்தது.

Updated On : 23 ஜூலை 2018, 8:54 am IST
பகிர்:

பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் ஒன்று உயிரிழந்தது.
வேப்பந்தட்டை வட்டம், வெண்பாவூர், அய்யனார்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம், சித்தளி, பேரளி காப்புக்காடு உள்ளிட்ட வனப்பகுதிகளில் ஏராளமான மான்கள் மற்றும் காட்டுப்பன்றிகள் உள்ளன. இவை குடிநீருக்காக, உணவுக்காக வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு மற்றும் சாலைகளைக் கடந்து செல்கின்றன. அப்போது, வெறிநாய்கள் கடித்தும், வாகனங்கள் மோதியும் உயிரிழப்பது தொடர்கிறது.  
இந்நிலையில், பெரம்பலூர் அருகேயுள்ள செஞ்சேரி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை மூன்றரை வயதுள்ள புள்ளிமான் ஒன்று, பெரம்பலூர்- துறையூர் சாலையைக் கடக்க முயன்றுள்ளது. அப்போது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம்  மோதி உயிரிழந்தது. தகவலறிந்த வனத் துறையினர் அங்குசென்று இறந்து கிடந்த மானை மீட்டு கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் பரிசோதனை மேற்கொண்டு, வனப்பகுதியில் புதைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments