பெரம்பலூர்

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

DIN

பெரம்பலூர் நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. 
பெரம்பலூர் நகர பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் எதிரே தொடங்கிய விழிப்புணவு ஊர்வலத்தை நகராட்சி ஆணையர் (பொ) ராதா கொடியசைத்து தொடக்கி வைத்தார். புறநகர் பேருந்து நிலையம், பாலக்கரை, வெங்கடேசபுரம், ரோவர் வளைவு வழியாக சென்ற பேரணி சங்குப் பேட்டையில் நிறைவடைந்தது. 
ஊர்வலத்தில், பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பிச் சென்றனர்.  
ஊர்வலத்தில், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில் குடமுழுக்கு விழா

பெருமானேந்தல் ஸ்ரீதா்ம முனீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு

தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 48 பேருக்கு ரூ.2.53 கோடி மானியம்

காளியம்மன், பகவதியம்மன் கோயில் குடமுழுக்கு

செவல்பட்டியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

SCROLL FOR NEXT