முகப்பு
பெரம்பலூர்

கிருஷ்ணாபுரத்தில் செவ்வாய் தோறும் பருத்தி ஏலம்

வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரம்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும்

Updated On : 23 ஜனவரி 2019, 7:24 am IST
பகிர்:

வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரம்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில், பெரம்பலூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில், செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெற உள்ளது.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பருத்தி விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்று, தாங்கள்  உற்பத்தி செய்யும் பருத்தியை கொண்டு வந்து விற்பனை செய்து பயன்பெறலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.