பெரம்பலூர்

பிரம்மபுரீசுவரர் கோயிலில் வெள்ளி ரிஷிப வாகன வெள்ளோட்டம்

DIN

பெரம்பலூர் அருள்மிகு அகிலாண்டேசுவரி உடனுறை பிரம்மபுரீசுவரர் கோயிலுக்கு, ரூ. 28 லட்சம் மதிப்பில் புதிதாக செய்யப்பட்ட வெள்ளி ரிஷிப வாகனத்தின் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோயில் வளாகத்தில் தொடங்கி கடை வீதிவழியாகச் சென்ற வெள்ளோட்டம் மீண்டும் கோயிலில் நிறைவடைந்தது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு விநாயகர் பூஜை,  ஸ்நபன பூஜையும், அனைத்து மூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடைபெற்றது.
பிற்பகல்  1 மணிக்கு மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதலும், இரவு 7 மணிக்கு சுவாமி திருவீதி உலா வருதலும் நடைபெற்றது. இதில், தக்கார் டி. விஜயராணி, நிர்வாக அலுவலர் வை. மணி, 
முன்னாள் அறங்காவலர் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீ விபத்தில் பாதித்தோருக்கு நிவாரண உதவி

பாஜக கூட்டணியில் உத்தவ் தாக்கரே இணைவாா்: மகாராஷ்டிர எம்எல்ஏ கருத்து

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வாக்கு கணிப்புகளுக்கு மாறாகத் தோ்தல் முடிவுகள் இருக்கும்: சோனியா காந்தி

ஆம்பூரில்...

SCROLL FOR NEXT