பெரம்பலூர்

பார்வையற்ற மாணவர்களுக்கு அதிமுக சார்பில் கல்வி உதவித்தொகை

DIN

கல்விக் கட்டணம் செலுத்த முடியாத 3 பார்வையற்ற மாணவ, மாணவிக்கு பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் கல்வி உதவித்தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் பூமாலை. இவர் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்  விபத்தில் இறந்துவிட்டார். இவரது மனைவி ராஜகுமாரி. இவர்களின் வாரிசுகளான சந்துரு, சந்தியா, சஞ்சய் ஆகிய  மூவரும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள். 
ராஜகுமாரி விவசாய கூலிவேலை செய்து தனது குந்தைகளைப் படிக்க வைத்தார். தற்போது, சந்துரு  திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ வரலாறு படிக்க உள்ளார். சந்தியா 12ஆம் வகுப்பும், சஞ்சய் 7 ஆம் வகுப்பும் தஞ்சாவூரில் படித்து வருகின்றனர். 
இந்நிலையில், தற்போது நிலவும் வறட்சியால் கூலி வேலை கிடைக்காததால் ராஜகுமாரி தனது பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகிறார்.  
கேரளத்தில் சிகிச்சை பெற்று வரும் பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலரும், குன்னம் தொகுதி எம்எல்ஏவுமான  ஆர்.டி. ராமச்சந்திரன், இத்தகவலறிந்து தனது சொந்த நிதியாக ரூ. 50 ஆயிரம் வழங்க முடிவு செய்து, அத்தொகையை வழங்க உதவியாளருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, பெரம்பலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்திற்கு பார்வையற்ற 3 பேரையும், அவர்களது தாயாரையும் வரவழைத்து, அவர்களது கல்வி உதவித்தொகைக்காக ரூ. 50 ஆயிரத்தை வேப்பந்தட்டை ஒன்றிய செயலர் சிவப்பிரகாசம் வழங்கினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT