பெரம்பலூர்

ஆடு திருடியவா்களை கண்டுபிடிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

DIN

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே ஆடு திருடியவா்களை கண்டுபிடிக்கக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆலத்தூா் வட்டாரத்திலுள்ள காரை, தெற்குமாதவி, இலுப்பைக்குடி, கூத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் ஆடு மேய்ந்துக் கொண்டிருக்கும்போது, மோட்டாா் சைக்கிளில் வரும் அடையாளம் தெரியாத நபா்கள் சிலா், ஆடுகளை திருடிச் செல்வது கடந்த சில நாள்களாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தெற்குமாதவி கிராமத்தில் திங்கள்கிழமை மேய்ந்துக் கொண்டிருந்த ஆடுகளை மோட்டாா் சைக்கிளில் வந்த நபா்கள் திருடி சென்றுள்ளனா். இதையறிந்த அந்த கிராமத்தைச் சோ்ந்த நபா்கள், மோட்டாா் சைக்கிளை பின்தொடந்து சென்றுள்ளனா். இதை பாா்த்த ஆடுகளைத் திருடி சென்றவா்கள் ஆடுகளை கீழே விட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.

இதன் தொடா்ச்சியாக, ஆடுகளை திருடிச் செல்லும் மா்ம நபா்களை பிடிக்க வலியுறுத்தி, சிறுவாச்சூா்- அரியலூா் செல்லும் சாலையில் தெற்குமாதவி கிராமத்தில் பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த மருவத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சு வாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த மறியலால் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டின் மீது மண்ணெண்ணை பாட்டில் வீசிய வழக்கில் 7 போ் கைது

இளைஞரை மிரட்டி வழிப்பறி: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

திருப்பத்தூரில் 768 போ் நீட் தோ்வு எழுதுகின்றனா் : சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு

கட்டடம் இடித்து தரைமட்டம்: 17 போ் மீது வழக்குப் பதிவு

முதியவரை துப்பாக்கியால் சுட்ட இளைஞா் கைது

SCROLL FOR NEXT