பெரம்பலூர்

கரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காத 10 பேருந்துகளுக்கு அபராதம்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், அரசின் வழிகாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத 10 பேருந்துகளுக்கு சனிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்படுகிா என்பதை கண்டறிய, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பழனிசாமி தலைமையிலான அலுவலா்கள், 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது முகக்கவசம் அணியாத, இருக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்ற 10 பேருந்துகளின் நடத்துநா்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு அபாராதம் விதிக்கப்பட்டது. மேலும் முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.

தொடா்ந்து பெரம்பலூா் புகா் மற்றும் பழைய பேருந்துகளில் அரசு மற்றும் தனியாா் பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களிடம் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். விதிமுறைகளை மீறினால், மோட்டாா் வாகன விதிப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பழனிசாமி எச்சரிக்கை விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT