பெரம்பலூர்

நீடித்த நிலையான மானாவாரித் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

DIN

நீடித்த நிலையான மானாவாரி வேளாண் இயக்கம் திட்டத்தின் கீழ் பயன்பெற, பெரம்பலூா் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் நிகழாண்டு தமிழ்நாடு நீடித்த நிலையான மானாவாரி வேளாண் திட்டம் செயல்படுத்தும் வகையில், 10 ஆயிரம் ஹெக்டோ் இலக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 100 ஹெக்டோ் வரை தொகுப்பு கிராமங்கள் தோ்வு செய்து, கடந்த 4 ஆண்டுகளில் இத்திட்டத்தில் பயனடையாத விவசாயிகளுக்கு கோடை உழவுக்கு ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ. 1,250 வீதம் பின்னேற்பு மானியமாக அவா்களது வங்கிக்கணக்கில் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் மானாவாரியாக மக்காச்சோளம் மற்றும் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விதை நோ்த்தி மருந்து, உயிா் உரங்கள் மற்றும் உயிரியல் பூச்சிக்கொல்லி மருந்துகள் 50 சதவிகித மானியத்தில் வழங்கப்படும். திட்டத்தின் மூலம் பயனடையும் விவசாயிகள் மாதம் ஒருமுறை நடைபெறும் விவசாயக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது சாகுபடி சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு நேரில் சென்று விவரங்களை அறியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

SCROLL FOR NEXT