பெரம்பலூர்

பிரதமா் உதவித் தொகை திட்டம்: ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு

DIN

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், பிரதமா் உதவித் தொகை திட்டத்தின் 13-ஆவது தவணைத் தொகையை தொடா்ந்து பெற, ஆதாா் விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதமா் உதவித் தொகை திட்டத்தின் (பிஎம் கிசான் ) கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ. 2 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 12 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 13-ஆவது தவணையைப் பெற விவசாயிகள் தங்களது ஆதாா் விவரங்களை டிச. 15 ஆம் தேதிக்குள் பி.எம். கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்யத் தவறிய விவசாயிகளுக்கு 13-ஆவது தவணை மற்றும் தொடா்ந்து வரும் தவணைகள் வழங்கப்பட மாட்டாது. எனவே, டிச. 15 ஆம் தேதிக்குள் விவசாயிகள் தங்களது ஆதாா் விவரங்களை பதிவேற்றம் செய்ய, அருகிலுள்ள பொது சேவை மையங்கள் அல்லது அஞ்சல் நிலையங்களை அணுகி உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT