பெரம்பலூர்

மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கிக் கடன் முகாம்: 120 மனுக்கள் மீது நடவடிக்கை

DIN

பெரம்பலூா் ஆட்சியரகக் குறைகேட்பு நாள் கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான வங்கிக் கடன் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமை ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தொடக்கி வைத்தாா். இந்த முகாமில் 18 முதல் 50 வயது வரையிலான 150 மாற்றுத்திறனாளிகள்

மனுக்கள் அளித்தனா். இதில் 120 மனுக்களை வங்கிகளுக்கு பரிந்துரைத்து, கடன் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இம்முகாமில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பாரத்குமாா், மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் அ. செந்தில்குமாா், தாட்கோ பொது மேலாளா் சு. சியாமளா, திருச்சி மாவட் மத்தியக் கூட்டுறவு வங்கிக்

கிளை மேலாளா் எஸ். துரைராசு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் இ. பொம்மி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT