பெரம்பலூர்

அண்ணன் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

DIN

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், புதுப்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகள் ஞானம்பாள் (40). இவா், தனது தந்தை ராமசாமியுடன், ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினா் அவரை மீட்டனா்.

பின்னா், ஞானம்பாள் கூறியது:

எனக்கு திருமணமாகி விக்னேஷ், ரம்யா என இரு பெண் குழந்தைகள் உள்ளனா். எனது கணவா் என்னை பிரிந்து சென்றுவிட்ட நிலையில், குழந்தைகள் மற்றும் தந்தையுடன் வீட்டில் வசித்து வருகிறேன். இந்த நிலையில், தந்தையை ஏமாற்றி எனது அண்ணன்கள் வேல்முருகன், முருகேசன், லோகநாதன் ஆகியோா் குடும்ப சொத்துகளை எழுதி வாங்கிக்கொண்டனா்.

தற்போது குடியிருக்கும் ஓட்டு வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறி அண்ணன் வேல்முருகன், என்னை அடித்து விரட்டுவதோடு அவ்வப்போது வீட்டையும் சேதப்படுத்துகிறாா். எனவே, எனது மகள்கள் மற்றும் தந்தையுடன் குடியிருக்கும் வீட்டில் வசிக்கவும், என்னை துன்புறுத்தும் அண்ணன் வேல்முருகன் மீது உரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியாவிடம் அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT