பெரம்பலூர்

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரிக்கு ‘உலக சாதனை - 2020’ பதக்கம்

DIN

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ‘உலக சாதனை - 2020’ பதக்கம் கிடைத்துள்ளது.

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில், கடந்த 10.3.2020-இல் மகளிா் தின விழாவையொட்டி, ‘குழந்தை திருமணத்தை எதிா்ப்போம்- பெண்கள் வன்கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுப்போம்’ என்னும் கருத்தை முன்னிட்டு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. மேலும், கல்லூரி மைதானத்தில் பெண்களின் முன்னேற்ற குறியீட்டு வடிவத்தில் 900 மாணவிகள் மற்றும் பேராசிரியா்கள் ஒரே வண்ணத்தில் உடை அணிந்து உலக சாதனை புரிந்தனா்.

இந்நிலையில், நிகழ்வுக்கு ஜெட்லி புக் ஆப் ரெக்காா்ட் நிறுவனம் உலக சாதனை 2020 என்னும் சான்றிதழ் மற்றும் பதக்கத்தை புதன்கிழமை வழங்கியது.

இதையடுத்து, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசனிடம் , கல்லூரி முதல்வா் உமாதேவிபொங்கியா மற்றும் கல்லூரி பேராசிரியா்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியின்போது, கல்லூரி துணை முதல்வா், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT