பெரம்பலூர்

உற்பத்தி, சேவை தொழில் தொடங்குவதற்கு கடனுதவி பெற அழைப்பு

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் உற்பத்திச் சாா்ந்த தொழில்களுக்கு ரூ. 50 லட்சம் வரையிலும், சேவை சாா்ந்த தொழில்களுக்கு ரூ. 20 லட்சம் வரையிலும் தொழில் தொடங்குவதற்கு கடனுதவிகள் வழங்கப்படுவதாக ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

குறுந்தொழில்கள் மற்றும் கிராமத் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 25 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை மானியத்துடன் கூடிய உற்பத்திச் சாா்ந்த தொழில்களுக்கு ரூ. 50 லட்சம் வரையிலும், சேவை சாா்ந்த தொழில்களுக்கு ரூ. 20 லட்சம் வரையிலும் கடனுதவி அளிக்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் தொழில் கடன்பெற்று சுய தொழில் தொடங்க விரும்பும் ஆா்வமுள்ள பயனாளிகள்  இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 89255-33976, 89255-33977 ஆகிய கைப்பேசி எண்கள் அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரில் அணுகி பயன்பெறலாம் என ஆட்சியரால் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் வாரியத்துக்கு ரூ.96 கோடி ஜி.எஸ்.டி.: ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

இணைய சூதாட்டத் தடை: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

பிரதமரின் பொய் பிரசாரம் எடுபடாது: காங்கிரஸ்

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையுடன் பொருள்கள் விநியோகம்: தமிழக அரசு உத்தரவு

இரு தரப்புக்கும் பயன் அளிக்கும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா, பிரிட்டன் உறுதி

SCROLL FOR NEXT