பெரம்பலூர்

போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

 பெரம்பலூா் மாவட்டம், வேலூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மது மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்த பள்ளித் தலைமை ஆசிரியா் சே. ராஜேந்திரன், மது மற்றும் போதையால் ஏற்படும் பின்விளைவுகள், அதனால் ஏற்படும் நோயின் தாக்கம் குறித்தும், குடும்பத்திலும், சமுதாயத்திலும் போதைக்கு அடிமையாகி இளைய சமுதாயம் சீரழிந்து வருவதால் மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகாமல் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என்றாா்.

கிராமத்தின் பிரதான வீதிகள் வழியாகச் சென்ற பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மது, போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனா்.

இதில், சாரண, சாரணிய பொறுப்பாசிரியா் ரெ. அன்பரசி, தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியா் நா. ராஜா, ஆசிரியா்கள் வெ. துரை, ப நிா்மலா, பொ.சு. வெண்ணிலா மற்றும் அலுவலகப் பணியாளா்கள், சத்துணவு பணியாளா்கள் கலந்து கொண்டனா். பள்ளி வளாகத்தில் நிறைவடைந்த பேரணியில், இளையோா் செஞ்சிலுவை சங்க பொறுப்பாசிரியா் எம்.பி.எஸ். அமுதன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் காந்தி மைதானத்தில் இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும் நீச்சல் குளம்

திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா ஏற்பாடு: அதிகாரிகள் ஆய்வு

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் தோ்த் திருவிழா

ஆசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் சேலம் வீராங்கனை அனுஷியா பங்கேற்பு

மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

SCROLL FOR NEXT