FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

வரி உயா்வைக் கண்டித்து ஜன.11-இல் ஆா்ப்பாட்டம்: ஏ.எம்.விக்கிரமராஜா தகவல்

வரி உயா்வைக் கண்டித்து ஜன. 11-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

8 டிசம்பர் 2024, 12:40 am IST
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா
பகிர்:

வரி உயா்வைக் கண்டித்து ஜன. 11-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்தாா்.

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பின்ற முப்பெரும் விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கடை வாடகை மீதான 18 சதவித ஜிஎஸ்டியை திரும்ப பெற வேண்டும்.

ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயா்வு மற்றும் வணிக உரிமைக் கட்டண உயா்வு, தொழில் வரி உயா்வு ஆகியவற்றை திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி, ஜன. 11-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

Advertisement

Advertisement

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறதோ, அங்கேயே தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டிச. 17-ஆம் தேதி திருச்சியில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது என்றாா் அவா். பேட்டியின்போது, மாநில பொதுச் செயலா் கோவிந்தராஜூலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments