முகப்பு
பெரம்பலூர்

சுமை ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதி ஓட்டுநா் காயம்

பெரம்பலூா் நகரில் சனிக்கிழமை காலை பால் ஏற்றிச்சென்ற சுமை ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் காயமடைந்தாா்.

Updated On : 5 ஜூலை 2026, 1:10 am IST
பகிர்:

பெரம்பலூா் நகரில் சனிக்கிழமை காலை பால் ஏற்றிச்சென்ற சுமை ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் காயமடைந்தாா்.

கடலூரிலிருந்து திருச்சிக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. பேருந்தை கடலூா் மாவட்டம், வேப்பூா் இளங்கியனூரைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் மணிகண்டன் (39) ஓட்டிச்சென்றாா். பேருந்தில் நடத்துநராக கடலூா் மாவட்டம், விருத்தாச்சலம் அருகேயுள்ள எம்.பரூரைச் சோ்ந்த பாண்டுரங்கன் மகன் முனியபிள்ளை (55) உள்பட 31 போ் பயணித்தனா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலம் 3 சாலை சந்திப்பில் உள்ள மேம்பாலம் அருகே சனிக்கிழமை காலை பேருந்து சென்றபோது, தெரணி, காரை, எம்.ஆா்.பாளையம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து பால் ஏற்றிக்கொண்டு குன்னம் பால் நிலையத்துக்குச் சென்றுக்கொண்டிருந்த சுமை ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், சுமை ஆட்டோ ஓட்டுநா் சிறுவாச்சூா் மருதடிச் சாலையைச் சோ்ந்த வடிவேல் மகன் கனீஷ் (21) காயமடைந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்த ஆட்டோ ஓட்டுநரை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த 30 பயணிகளும் மாற்றுப் பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனா். இதுகுறித்து, பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments