முகப்பு
புதுக்கோட்டை

"கணக்கெடுப்புப் பணியைப் புறக்கணிக்க முடிவு

ஊனமுற்றோó கணக்கெடுப்புப் பணியை புறக்கணிக்கப் போவதாக தமிழ்நாடு அரசு அனைத்து கிராம சுகாதார செவிலியர் சங்கம் அறிவித்துள்ளது.

Updated On : 12 மே 2013, 6:24 am IST
பகிர்:

ஊனமுற்றோó கணக்கெடுப்புப் பணியை புறக்கணிக்கப் போவதாக தமிழ்நாடு அரசு அனைத்து கிராம சுகாதார செவிலியர் சங்கம் அறிவித்துள்ளது.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை மாவட்டத் தலைவர் வீ. கீதா தலைமையில் நடைபெற்ற சங்கத்தின் மாவட்ட பொதுக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், 1 முதல் 15 வயது வரையுள்ள பிறவி ஊனம் மற்றும் உடல் ஊனமுற்றோர் குறித்த கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ளாமல் கிராம சுகாதார செவிலியர்கள் புறக்கணிப்பது. காலியாக உள்ள கிராம செவிலியர்கள், சுகாதார செவிலியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர் பயிற்சி முடித்து கிராம சுகாதார செவிலியர்களாக பணியாற்றிவரும் நிலையில், அவர்களுக்கு அங்கன்வாடியில் பணியாற்றிய பணிக்காலத்தையும் சேர்த்து ஓய்வூதியம் வழங்க வேண்டும். அண்டக்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த மூன்று மாதங்களாக 10 -ம் தேதியே ஊதியம் வழங்கப்படுவதைக் கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement

மாவட்டச் செயலர் வி. இந்திராணி வரவேற்றார். பொருளாளர் எஸ். கற்பகம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.