புதுக்கோட்டை

நகைக் கடைக்காரரைத் தாக்கி அரை கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை: 3 பேர் கைது: உடனடியாக நகைகள் மீட்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கே.புதுப்பட்டியில் நகைக்கடை உரிமையாளரைத் தாக்கி, அரை கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளையடித்துச் சென்றனர். இதையடுத்து, போலீஸார் விரைவாகச் செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்ததுடன், நகைகளையும் மீட்டுள்ளனர்.
கே.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் தினேஷ்பாபு (29). இவர்கள் அங்கு நகைக்கடை வைத்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு கடையில் இருந்த தங்கம், வெள்ளிப் பொருட்கள், ரொக்கத்தை பையில் எடுத்துக் கொண்டு கடையைப் பூட்டிவிட்டு இருவரும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
அப்போது, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகே 2 மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத சிலர் தினேஷ்பாபுவையும், அவரது தந்தையையும் வழிமறித்து அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில், இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தபோது, அவர்கள் வைத்திருந்த பையில் இருந்த சுமார் 500 கிராம் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ. 40 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
தாக்குதலில் காயமடைந்த செல்வராஜ், அவரது மகன் தினேஷ்பாபு இருவரும் காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் லோகநாதன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். இவ்வழக்கின் புலன் விசாரணைக்காக கே.புதுப்பட்டி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கொள்ளை சம்பவம் தொடர்பாக, போலீஸார் சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதைத்தொடர்ந்து, அரிமளம் லட்சுமணன் மகன் பாஸ்கரன், கைலாசம் மகன் முத்துஅடைக்கலம், சண்முகம் மகன் கோபால் ஆகியோரை தனிப்படையினர் கைதுசெய்து, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.
சம்பவம் நடந்து 24 மணி நேரத்தில் கொள்ளையர்களை கைது செய்து, நகைகளை மீட்ட காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT