முகப்பு
புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 10 பேர் காயம்

இலுப்பூர் அருகே இருந்திரப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் வீரர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:27 am IST
பகிர்:

இலுப்பூர் அருகே இருந்திரப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் வீரர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே இருந்திரப்பட்டி முத்து மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை ஜல்லிக்கட்டு போட்டியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மாவட்ட வருவாய் ஆய்வாளர் அ. ராமசாமி, இலுப்பூர் வருவாய் கோட்டாச்சியர் ஆர். ஜெயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 695 காளைகள், 215 மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து அனுமதித்தனர். 
வாடிவாசலில் முதல் காளையாக கோயில் காளையும், அதனைத் தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளைகள் முட்டித் தள்ளியதில் மாடுபிடி வீரர்களான லட்சுமணப்பட்டி விஜய் (20), சரத் (22), இ.மேட்டுப்பட்டி ஜெயபால் (22), விஜயக்குமார் (26), பார்வையாளர் மடத்தில் இருந்த முத்துடையான்பட்டி தெய்வமணி (20), தன்னங்குடி விஜயன் (50)  உள்பட 10 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு தாற்காலிக முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சைக்காக இருவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments