ரயில் மறியலுக்கு முயற்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 105 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 105 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 105 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மு.மாதவன் தலைமையில் அக்கட்சியினர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர், திருக்கோகர்ணம் போலீஸார் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 20 பெண்கள் உள்பட 105 பேரைக் கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.