இறப்புச் சான்றிதழ் வழங்காததால் மருத்துவமனை முன்பு தர்னா
தாயின் இறப்புச் சான்றிதழை வழங்காததைக் கண்டித்து, புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு அவரது மகன், உறவினர்கள்
தாயின் இறப்புச் சான்றிதழை வழங்காததைக் கண்டித்து, புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு அவரது மகன், உறவினர்கள் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.புதுகை ஜீவா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்.
இவரது தாயார் சீதை. உடல்நலக்குறைவு காரணமாக புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மார்ச் 29 ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில்,வெங்கடேஷ், அவரது தாயின் இறப்பு சான்றிதழ் கோரி உரிய ஆவணங்களை மருத்துமனையில் கொடுத்துவிட்டாராம். இருப்பினும் இதுவரை அவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லையாம்.இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மருத்துவமனைக்கு சென்ற வெங்கடேஷ், இறப்பு சான்றிதழ் வழங்கும்படி கேட்டு மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவமனை முன்பு அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக உறவினர்களும், அங்கிருந்த பொதுமக்களும் தர்னாவில் ஈடுபட்டனர். இதையடுத்து, தர்னாவில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.