முகப்பு
புதுக்கோட்டை

விஷம் குடித்து ஒருவர் தற்கொலை

அன்னவாசல் அருகேயுள்ள விளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சேட் சாயூப் (51). இவர் விளத்துப்பட்டி ஊராட்சியில் மேல்நிலை குடிநீர்த் தொட்டி

Updated On : 18 ஏப்ரல் 2018, 9:25 am IST
பகிர்:

அன்னவாசல் அருகேயுள்ள விளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சேட் சாயூப் (51). இவர் விளத்துப்பட்டி ஊராட்சியில் மேல்நிலை குடிநீர்த் தொட்டி இயக்குபவராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி மும்தாஜ் பேகத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. மருத்துவர்கள் அவருக்கு புற்றுநோய் இருப்பதாகக் கூறியதாகத் தெரிகிறது.  
இதையடுத்து, சேக் சாயூப் கடந்த சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்ட நிலையில், கடந்த திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது, பூச்சிமருந்தை குடித்து மயங்கியுள்ளார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.  அன்னவாசல் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.