தூத்தூரில் அகற்றப்பட்ட பட்டுப்போன மரம்: தினமணி செய்தி எதிரொலி
பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே ஆபத்தான நிலையில் காணப்பட்ட
பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே ஆபத்தான நிலையில் காணப்பட்ட பழமையான மரம் தினமணி செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டது.
தூத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே சுமார் 80 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புளியமரம் இருந்தது. முறிந்து விழும் நிலையில் காணப்பட்ட இம்மரத்தின் பட்டுப்போன கிளைகள் பள்ளிக் கட்டடத்தின் மேல் படர்ந்திருந்ததால், இப்பள்ளி மாணவ, மாணவிகள் அச்சத்துடனே பள்ளிக்கு சென்று வந்தனர். எனவே, பள்ளி அருகே ஆபத்தான நிலையில் காணப்பட்ட மரத்தினை அகற்றக்கோரி ஊர் பொதுமக்கள் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் 12 ஆம் தேதி தினமணி நாளிதழ் இதுகுறித்து செய்தி வெளியிட்டது. இதையடுத்து இம்மரம் அண்மையில் அகற்றப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.