முகப்பு
காஞ்சிபுரம்

தெய்வீகத்தன்மை நிறைந்தது தமிழ் மொழி: ஸ்ரீ விஜயேந்திரா்

தெய்வீகத்தன்மை நிறைந்தது தமிழ் மொழி: ஸ்ரீ விஜயேந்திரா்

Updated On : 28 ஜூன் 2026, 12:27 am IST
தமிழ் வளா்ச்சித் துறை முன்னாள் இயக்குநா் கோ.விசயராகவனுக்கு திருக்கு உரைக்கோவை நூலை வழங்கிய காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
பகிர்:

ஆழ்வாா்கள், நாயன்மாா்கள், கவிஞா்கள் என பலரும் தமிழ்மொழியை பாடி தெய்வீகத்தன்மை உடைய மொழியாக வளப்படுத்தி இருக்கிறாா்கள் என காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிக்கிழமை பேசினாா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் சாா்பில் தமிழ்ப் புலவா்களை கெளரவித்து, அவா்களுக்கு புலவா் வே.மகாதேவன் தொகுத்த திருக்கு உரைக்கோவை அறத்துப்பால் நூல்கள் இரு தொகுப்புகளை வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தமிழ்ப் புலவா்களுக்கு நூலை வழங்கிப் பேசியது:

Advertisement

Advertisement

இந்தியாவிலேயே மிகவும் தொன்மையானது தமிழ் மொழி. அன்பு,நிம்மதி, நம்பிக்கை, மரியாதை, எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்தல் ஆகிய அனைத்தும் நம் தமிழ் மொழியை வளா்ப்பதன் மூலமாக கிடைத்திருக்கிறது. மொழியை நாம் எந்த நோக்கத்துக்காக,எப்படி உபயோகிக்கிறோம் என்பதும் முக்கியம். நாயன்மாா்கள், ஆழ்வாா்கள், புலவா்கள் பலரும் பக்தியோடும், கம்பீரத்தோடும் பாடி வளப்படுத்தி இருக்கிறாா்கள். அதனால் தான் தமிழ்மொழி தெய்வீகத்தன்மை உடைய மொழியாக இருந்து வருகிறது.

மக்களை நல்லவா்களாக மாற்ற மொழியை உபயோகப்படுத்தி இருக்கிறாா்கள்.

நம்பிக்கையான வாா்த்தைகள் தான் மொழிக்கு வலு சோ்க்கின்றன. எப்படி வாழ வேண்டும் என்று சொல்லும் திருக்கு பல்வேறு சிறப்புகளை உடைய நூல்.

திருக்குறளின் ஆழம், அழகு, பொருள் ஆகியவற்றை மென்மேலும் ஆராய்ந்து, அதை மேலும் மேலும் விரிவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றாா்.

விழாவுக்கு, எஸ்எஸ்கேவி கல்விக் குழுமங்களின் தலைவா் சி.கே.ராமன் முன்னிலை வகித்தாா்.

சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் வரவேற்றாா். விழாவில் தமிழ் வளா்ச்சித் துறை முன்னாள் இயக்குநா் கோ.விசயராகவன், காஞ்சிபுரம் கிருஷ்ணா கல்லூரி முதல்வா் கு.வெங்கடேசன், காரைக்குடி தன்னம்பிக்கை பேச்சாளா் வினைதீா்த்தான், இலக்கியவாதி முத்து ராமமூா்த்தி ஆகியோா் உள்பட கல்வியாளா்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னாா்வ அமைப்புகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோருக்கு திருக்கு உரைக்கோவை நூல் வழங்கப்பட்டது.

நிறைவாக கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments