புதுக்கோட்டை

சேதமடைந்த அரசுப் பள்ளி கட்டடம்

DIN

கஜா புயலால் சேதமடைந்த இல்லணிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என நற்பணி மன்றத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
கஜா புயலின் தாக்கத்தினால் பொன்னமராவதி ஒன்றியம் இல்லணிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஓடுகள் உடைந்து மேற்கூரை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மழைநீரினால் பள்ளிக்குள் இருந்த புத்தகங்கள், பாடக்குறிப்பேடுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.
 ஒரே கட்டடத்தைக் கொண்டு செயல்படும் இப்பள்ளி கட்டடமும் சேதமடைந்து விட்டதால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. எனவே உடனடியாக இப்பள்ளி கட்டிடத்தை சீரமைத்தும், கூடுதல் கட்டிடங்களை அமைத்தும் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நம் கிராமம், நம் கையில் நற்பணி மன்ற நிர்வாகி உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT