புதுக்கோட்டை

வன உயிரினங்களை காக்க விழிப்புணர்வு போட்டி

DIN

புதுக்கோட்டையில் வனத்துறை சார்பில் வன உயிரினங்களைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், பேச்சுப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை, சந்தைப்பேட்டை  நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியை மாவட்ட வன அலுவலர் எம். ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.
இதில் பள்ளி,  கல்லூரிகளைச் சேர்ந்த 200 மாணவர்கள்  கலந்து கொண்டனர். போட்டிகளில் வெல்வோருக்கு அக்டோபர் மாதம் நடைபெற உள்ள வனஉயிரின வார விழாவில் பரிசளிக்கப்படும் என வனத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் வனச்சரக அலுவலர்கள் எம். சதாசிவம், சி. சங்கர், பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT