புதுக்கோட்டை

விஷமத்தனமான ஆடியோ வெளியிட்டோர் மீது நடவடிக்கை தேவை

DIN

 ஒரு சமூகத்தைப் பற்றி தவறான கருத்தை, விஷமத்தனமான கருத்தை பதிவிட்டு பரப்பிவிட்ட இளைஞர்களைப் போலீஸார் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆறு .சரவணத் தேவர்  வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் குறித்து தவறான,  விஷமத்தனமான கருத்தைப் பதிவு செய்து கட்செவி அஞ்சலில் பரப்பியுள்ளனர். இரு சமூகத்தினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட இந்தச் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இரு சமூகத்துக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் இருப்பதால் காவல்துறை குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் . அதுவரை முக்குலத்து சமூகத்தினரும் அமைதி காக்க வேண்டும். எந்த சமூகத்துப் பெண்களாக இருந்தாலும் அவர்களைப் பற்றி அவதூறாக, இழிவாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT