புதுக்கோட்டை

அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்தவர் கைது

DIN

இலுப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்ததாக இருசக்கர வாகன விற்பனை நிலைய ஊழியர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிந்து கைது செய்தனர்.
பொது இடங்களில் விளம்பர பதாகைகள் வைப்பதற்கு அரசியல் கட்சி, தனியார் நிறுவனம் உள்ளிட்ட தரப்பினருக்கு தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 
குறிப்பாக, விளம்பர பதாகை வைப்பதற்கு முன், உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளிடம் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் இலுப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், தனியார் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தின் சார்பில் விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளதாக இலுப்பூர் பேருராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
இதையடுத்து, அந்த விற்பனை நிலைய ஊழியரான கண்ணன் மகன் தர்மதுரை(21) மீது போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT