திருவப்பூர் கோயில் மாசித் திருவிழா ஜல்லிக்கட்டில் 10 பேர் காயம்
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி கவிநாடு கண்மாயில்
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி கவிநாடு கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 934 காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன.
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதலுடன் தொடங்கியது.
இதையடுத்து கவிநாடு கண்மாயில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி தொடங்கி வைத்தார். இதில், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 934 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்குவதற்கு சுமார் 300 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர்.
காளைகள் முட்டியதில் 10 பேர் காயம் அடைந்தனர். பாதுகாப்புப் பணிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ் தலைமையிலான போலீஸார் மேற்கொண்டனர்.