தேசியப் போட்டிகளில் ஜெஜெ கல்லூரி சாம்பியன்
தேவகோட்டையில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான கெம் பெஸ்ட் 2019 போட்டிகளில் புதுக்கோட்டை
தேவகோட்டையில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான கெம் பெஸ்ட் 2019 போட்டிகளில் புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் பரிசுகளைப் பெற்றதால், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டமும் இக்கல்லூரிக்கே கிடைத்துள்ளது.
உயிர் வேதியியல் துறை மாணவர்கள் ஜேசன் டாம் ஆப்ரஹாம், உயிர்தொழில் நுட்பவியல் துறை மாணவர் ப்ராங்க்ளின் ஆப்ரஹாம் ஆகியோர் இணைந்து ஊமை ஷார்ட்ஸ் என்ற போட்டியில் பங்கேற்று முதலிடத்தைப் பெற்றனர்.
உயிர் வேதியியல் துறை மாணவிகள் எச். ஜெஸ்டிகா, ஆர். பவித்ரா, என். மங்கலபிரியா ஆகியோர் பயோ ப்ராடக்ட்ஸ் என்ற விளம்பர நடிப்பில் முதலிடத்தைப் பெற்றனர்.
உயிர் வேதியியல் துறை மாணவிகள் எஸ். பவானி, தி. ஐஸ்வர்யா ஆகியோர் இயற்கை எரிபொருட்கள் என்ற தலைப்பில் சுவரொட்டி தயாரித்தல் போட்டியில் முதலிடத்தைப் பெற்றனர். இதேபோல பல போட்டிகளில் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களையும் இக்கல்லூரிக் குழுவினர் பிடித்தனர்.
பல்வேறு பரிசுகளையும் பெற்றதால், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டமும் ஜெஜெ கல்லூரிக் குழுவுக்கே கிடைத்தது. சான்பியன் பட்டம் வென்ற மாணவ, மாணவிகளை, கல்லூரியின் அறங்காவலர் எஸ். கவிதா, செயலர் என். சுப்பிரமணியன், முதல்வர் ஜெ. பரசுராமன் உள்ளிட்டோரும் பாராட்டினர்.