புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே தப்பாட்டம் ஆடியவரை தாக்கிய இருவர் கைது

DIN


கந்தர்வகோட்டை அருகே நடந்த திருவிழாவில் தப்பாட்டம் ஆடிய இளைஞரை தாக்கிய இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
கந்தர்வகோட்டை அருகிலுள்ள பழைய கந்தர்வகோட்டை முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.  இதில்  தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு செங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ராஜா (33)  தலைமையில் தப்பாட்ட குழுவினர் கோயிலுக்கு பால்குடம் , காவடி எடுத்துச் செல்லும் பக்தர்களுக்கு முன் தப்பாட்டம் ஆடிக்கொண்டு சென்றனர்.
அப்போது பழைய கந்தர்வகோட்டையைச் சேர்ந்த சேகர் மகன் பிரகாஷ் (29) , வீரபாண்டியன் மகன் தண்டாயுதபாணி ( 26 ) ஆகிய இருவரும் ராஜாவை ஜாதியை சொல்லி திட்டி, தாக்கினர். இதுகுறித்து ராஜா கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குபதிந்து பிரகாஷ் , தண்டாயுதபாணி ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT