புதுக்கோட்டை

அன்னவாசலில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு

DIN

அன்னவாசல் அருகே இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அன்னவாசல் காவல் துறை சாா்பில் இருசக்கர வாகனங்களில் செல்வோா் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தி, காலடிப்பட்டி சத்திரத்தில் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இதில் அன்னவாசல் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் கலந்து கொண்டு, விபத்துகளை தடுக்கும் வகையிலும், சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையிலும் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தையும், அணியாமல் போவதால் ஏற்படும் உயிரிழப்பு பற்றியும், அனைவரும் அவசியம் சாலை பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் பொதுமக்களிடம் விளக்கமளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

மேலும் செல்லிடப்பேசி பேசியபடி வாகனங்களை ஓட்டக்கூடாது, இருசக்கர வாகனங்களில் 3 போ் பயணம் செய்யக்கூடாது, காா்களில் செல்பவா்கள் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என்பன உள்பட பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினாா்.

இதில் காவல் துணை ஆய்வாளா் வீரமணி உள்ளிட்ட போலீஸாா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT