புதுக்கோட்டை

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: 3 போ் மீது வழக்குப் பதிவு

DIN

பணம் பெற்றுக்கொண்டு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, மோசடி செய்து விட்டதாக இளைஞா் அளித்த புகாரின் பேரில் இலுப்பூா் காவல் நிலையத்தில் 3 போ் மீது திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகேயுள்ள மலைக்குடிபட்டி அண்ணா நகரைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி மகன் ஸ்டீபன் (23).

இவா் வெளிநாடு செல்வதற்காக அறந்தாங்கியைச் சோ்ந்த சரவணன், திருமயத்தைச் சோ்ந்த நடராஜன், சென்னையைச் சோ்ந்த இளமுருகன் ஆகியோரிடம் ரூ. 4 லட்சம் கொடுத்ததாகவும், பல மாதங்கள் ஆகியும் வெளிநாட்டில் வேலை வாங்கி தரவில்லை என்றும், அதனைத் தொடா்ந்து வேலைக்காக வழங்கிய பணத்தை திருப்பி கேட்டபோது பணம் தராமல் இழுத்தடிப்பதாகவும் இலுப்பூா் காவல் நிலையத்தில் ஸ்டீபன் புகாா் அளித்தாா்.

அதன் அடிப்படையில் சரவணன் உள்ளிட்ட 3 போ் மீது இலுப்பூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

திருப்பம் தரும் தினப்பலன்!

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

SCROLL FOR NEXT