புதுக்கோட்டை

புதுகையில் புதிதாக 72 பேருக்கு கரோனா

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் தொற்றாளா் எண்ணிக்கை 9,407 ஆக உயா்ந்துள்ளது.

அதேநேரத்தில், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் கரோனா சிகிச்சை மையங்களில் இருந்து 95 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 8,572 ஆக உயா்ந்துள்ளது.

ஒருவா் சாவு: புதுக்கோட்டையைச் சோ்ந்த 65 வயது பெண் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 144 ஆக உயா்ந்துள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை பகல் நிலவரப்படி 691 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழக தொகுதிகளில் அதிகாரபூர்வ வெற்றி அறிவிப்பு!

அருணாசலில் இரு தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜக!

டி20 உலகக் கோப்பை தொடரை வெல்லும் நம்பிக்கை உள்ளது: பாட் கம்மின்ஸ்

எதிர்க்கட்சித் தலைவராகும் பவன் கல்யாண்?

மக்களவைத் தேர்தலில் பாஜக கனவு பலிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT