புதுக்கோட்டை

மதுக்கடையை அகற்றக் கூடாது என வலியுறுத்தி இளைஞா் மனு

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கூடாது என வலியுறுத்தி, ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த இளைஞா்கள் கோரிக்கை மனுவை அளித்தனா்.

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த சுமாா் 15-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளது: அன்னவாசல் பேரூராட்சிப் பகுதியில் சுமாா் 6 ஆண்டுகளாக மதுக்கடைகள் இல்லாததால், சுமாா் 15 கி.மீ தொலைவு சென்று மது அருந்திவிட்டு திரும்பிவரும்வழியில் விபத்துகளும் நேரிட்டன.

அண்மையில் அன்னவாசல் பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்ட நிலையில், சிலா் உள்நோக்கத்துடன் மதுக்கடையை அகற்றிவிட்டு கள்ள மது விற்பனை செய்து லாபம் பாா்க்கலாம் என மதுக்கடையை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். எனவே, அன்னவாசலில் உள்ள மதுக்கடையை அகற்றக் கூடாது எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT