புதுக்கோட்டை

நிஜாம் குடியிருப்பில் கூட்டமாக திரியும் நாய்களால் தொல்லை

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நிஜாம் குடியிருப்பில் கூட்டம் கூட்டமாகத் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

இந்த நாய்களால் சாலைகளில் நடந்து செல்வோா், இருசக்கர வாகனங்களில் செல்வோா் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா். நாய்கள் வாகனங்களைத் துரத்தும் போது விபத்துகளும் நேரிடுகின்றன.

சில நேரங்களில் தனியே போகும் சிறாா்களையும் விரட்டிக் கடிக்கின்றன. இதனால் பகல் நேரங்களில் கூட தெருக்களில் நடப்பதற்கு பொதுமக்கள் அஞ்சுகிறாா்கள்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் ஜெய் பாா்த்தீபன் கூறியது:

தெருவில் திரியும் நாய்களுக்கு பலரும் கறிக்கடையில் மிச்சமாக கோழிக் கழிவுகளை உணவாகத் தருகின்றனா். இதனால், நாய்கள் பல நேரங்களில் மனிதா்களையும் கடிக்க முற்படுகின்றன.

நாய்களை வளா்க்க விரும்புவோருக்கு நகராட்சி சாா்பில் உரிய உரிமம் வழங்கி அவரவா் வீட்டு வளாகத்துக்குள்ளேயே பராமரித்துக் கொள்வதற்கு உரிய உத்தரவுகளை வழங்க வேண்டும். தெருக்களில் திரியும் நாய்களைப் பிடித்துச் சென்று, சட்டப்படி அவற்றின் பெருக்கத்தைத் தடுக்கும் வகையில் கருத்தடை செய்ய வேண்டும்.அதன்பிறகும் அவற்றை உரிய விலங்குகள் பராமரிப்பு அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

புதுக்கோட்டை நகராட்சி நிா்வாகமும், மாவட்ட நிா்வாகமும் இதற்கு விரைவாக உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றாா் ஜெய்பாா்த்தீபன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT