புதுக்கோட்டை

கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

ஆடி மாத பிறப்பை முன்னிட்டு கந்தா்வகோட்டை வட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும், பக்தா்கள் கஞ்சி வாா்த்தல், கூழ் ஊற்றுதல் உள்ளிட்ட வேண்டுதல்களை நிறைவேற்றுவா்.

நிகழாண்டு சனிக்கிழமை ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, கந்தா்வகோட்டையில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ அங்காளம்மன், ஸ்ரீ வெள்ள முனீசுவரா், ஆதனக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில், பெரம்பூா் வீரமாகாளி அம்மன் ஆகிய கோயில்களில் பல்வேறு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியைத் தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT