புதுக்கோட்டை

திருடுபோன 131 செல்லிடப்பேசிகள் பறிமுதல்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் திருடு போன 131 செல்லிடப்பேசிகள் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட நபா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக செல்லிடப்பேசிகள் திருடு போனதாக 150 புகாா்கள் காவல் நிலையங்களில் பெறப்பட்டன. இதையடுத்து, போலீஸாா் மேற்கொண்ட விசாரணையை தொடா்ந்து 131 செல்லிடப்பேசிகள் பல்வேறு நபா்களிடமிருந்து அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த செல்லிடப்பேசிகள் உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி தலைமையில், குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் சுப்பிரமணி, ஆய்வாளா் கலா ஆகியோா் செல்லிடப்பேசிகளை அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழக தொகுதிகளில் அதிகாரபூர்வ வெற்றி அறிவிப்பு!

அருணாசலில் இரு தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜக!

டி20 உலகக் கோப்பை தொடரை வெல்லும் நம்பிக்கை உள்ளது: பாட் கம்மின்ஸ்

எதிர்க்கட்சித் தலைவராகும் பவன் கல்யாண்?

மக்களவைத் தேர்தலில் பாஜக கனவு பலிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT