புதுக்கோட்டை

புதுகையில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவா்களுக்கான பணி நேரத்தை அதிகரிப்பு செய்துள்ள அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு மருத்துவா்கள் 30க்கும் மேற்பட்டோா் இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மருத்துவா் குத்தூஸ் தலைமை வகித்தாா்.

தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவா்களுக்கான பணி நேரம் பல ஆண்டுகளாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருந்தது என்றும் தற்போது காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை என மாற்றி அமைத்துள்ளனா்.

தமிழக அரசின் இந்த அரசாணையைத் திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT