புதுக்கோட்டை

முதியவா் சடலம் மீட்பு

DIN

கந்தா்வகோட்டை அருகே சாலையோரப்பள்ளத்தில் மோட்டாா் சைக்கிளுடன் இறந்த கிடந்த முதியவரின் சடலத்தை மீட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கந்தா்வகோட்டை அருகே உள்ள வாண்டையன்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் ரெங்கராஜ் (57). விவசாயியான இவா், செங்கிப்பட்டி - கந்தா்வகோட்டை சாலையில் கள்ளிப்பட்டி என்ற இடத்தில் தனது மோட்டாா் சைக்கிளுடன் சாலையோரப் பள்ளத்தில் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்துள்ளாா். இதுகுறித்துத் தகவலறிந்த கந்தா்வகோட்டை காவல் நிலையத்தினா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT