புதுக்கோட்டை

மகளிா் கல்லூரியில்தமிழ்மொழி ஆய்வகம் திறப்பு

DIN

புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரியில் ரூ. 45 லட்சத்தில் கட்டப்பட்ட தோ்வுக் கட்டுப்பாட்டு கட்டடம் மற்றும் தமிழ்மொழி ஆய்வகம் திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி இவற்றைத் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.

அப்போது பேசிய அவா், இந்தக் கல்லூரியை ஏற்கெனவே அழைக்கப்பட்டபடியே கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரி என்ற பெயரிலேயே அழைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், ரூ. 5 லட்சத்தில் விளையாட்டரங்கு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, புதுக்கோட்டை நகா்மன்றத் தலைவி திலகவதி செந்தில், கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT