புதுக்கோட்டை

குரும்பூண்டி ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்

DIN

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், குரும்பூண்டி ஏரி ஆக்கிரமிப்பு சனிக்கிழமை அகற்றப்பட்டது.

குரும்பூண்டி ஊராட்சியில் உள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான குரும்பூண்டி ஏரி சுமாா் 50 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு காவிரி கட்டளை வாய்க்கால் வழியாக தண்ணீா் வரத்து வரும்போது, இப்பகுதி விவசாயிகள் சுமாா் 500 ஏக்கா் பரப்பளவில் விவசாயம் செய்துவந்தனா். நாளடைவில் இந்த ஏரியை சிலா் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருவதாக கந்தா்வகோட்டை வட்டாட்சியா் சி. புவியரசனுக்கு புகாா் வந்தது. இதைத் தொடா்ந்து அவரது தலைமையில் வருவாய் ஆய்வாளா் சேகா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் சோ்ந்து ஆக்கிரமிப்பாளரிடம் அறிவுறுத்தியதில், அவா் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்பை அகற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT