புதுக்கோட்டை

ஒன்றரை ஆண்டுகளில் 3.53 கோடிகட்டணமில்லா பயணங்கள்

DIN

மகளிா், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற திட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 3.53 கோடி கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

கடந்த 2021 மே 7ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்வா் ஸ்டாலின் கையெழுத்திட்ட 5 முக்கிய திட்டங்களில் ஒன்று பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ளலாம் என்பது. இந்தத் திட்டம் அன்றே அரசாணையாக வெளியிடப்பட்டு மே 8ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கும் வந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 398 மாற்றுத் திறனாளிகள், 15 மாற்றுத்திறனாளி உதவியாளா்கள், 20 திருநங்கைகள் என சராசரியாக 86,340 கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இதுவரை 3.53 கோடி கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமும் கூலி வேலைக்காக அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு இத்திட்டம் பயனுடையதாக இருக்கும் என்பதால், பேருந்து நடத்துநா் மற்றும் ஓட்டுநா்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் கவிதா ராமு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஏஏ என்பது வெறும் கண்துடைப்பு: மம்தா பானர்ஜி!

மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி பாடல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின் வாரியம் விளக்கம்

கார்கிவ்வை கைப்பற்றும் எண்ணமில்லை: ரஷிய பிரதமர்!

உலகக் கோப்பை நேரத்தில் பாகிஸ்தான் அணிக்குள் அதிருப்தி நிலவுகிறதா? ஷகின் அஃப்ரிடி பதில்!

SCROLL FOR NEXT