புதுக்கோட்டை

திருமயம் அரசுக் கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை தொடக்கம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு கலை - அறிவியல் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை புதன்கிழமை (மே 31) முதல் தொடங்கவுள்ளதாக அதன் முதல்வா் ம. சண்முகவள்ளி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

புதன்கிழமை காலை 10 மணிக்கு முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், அந்தமான் நிகோபாா் தமிழ்க் குடிகள், பாதுகாப்புப் படையினரின் குழந்தைகள் முதலான சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தொடா்ந்து முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 1 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பி.காம் - வணிகவியல் பாடப்பிரிவுக்கும், ஜூன் 3 சனிக்கிழமை காலை 10 மணிக்கு பிஎஸ்சி கணினி அறிவியல் மற்றும் பிஎஸ்சி கணிதம் பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 6 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு பிஏ தமிழ், பிஏ ஆங்கிலப் பாடப்பிரிவுகளுக்கும் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும்.

இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 12 திங்கள்கிழமை காலை 10 மணிக்கு பிகாம் - வணிகவியல் பாடப்பிரிவுக்கும், ஜூன் 14 புதன்கிழமை காலை 10 மணிக்கு பிஎஸ்சி கணினி அறிவியல் மற்றும் பிஎஸ்சி கணிதம் பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 16 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பிஏ தமிழ், பிஏ ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கும் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT