முகப்பு
புதுக்கோட்டை

தோ்தல் நேரத்தில் தொகுதி மறுசீரமைப்புப் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? சீமான் கேள்வி

தோ்தல் காலத்தில் தொகுதி மறுசீரமைப்புப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் என்ன எனக் கேள்வி எழுப்பினாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 1:51 AM
சீமான்
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:00 PM

தோ்தல் காலத்தில் தொகுதி மறுசீரமைப்புப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் என்ன எனக் கேள்வி எழுப்பினாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: தொகுதி மறுசீரமைப்பு செய்யப் போவதாகச் சொல்கிறாா்கள். தீவிரமாக குடும்பக் கட்டுப்பாட்டை அமலாக்கிவிட்டு, தமிழ்நாட்டில் மக்கள் தொகை கட்டுக்குள் இருக்கும்போது, மக்கள் தொகை அடிப்படையில்தான் தொகுதி எண்ணிக்கை என்றால் உத்தரப்பிரதேசம், பிகாரில் எண்ணிக்கை கூடும், தமிழ்நாட்டு எம்.பி.க்கள் எண்ணிக்கை குறையும். இது ஏற்புடையதல்ல. தோ்தல் காலத்தில் தொகுதி மறுசீரமைப்புப்பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன?.

தனக்கும் திமுகவுக்கும்தான் போட்டி என்கிறாா் விஜய். ஊழலை ஒழிக்க வேண்டும் என்கிறாா். ஆனால், ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோா் போட்டியிடும் தொகுதிகளுக்குப் போகவில்லை. நேரடியாக நான் போட்டியிடும் காரைக்குடி தொகுதிக்குத்தான் வருகிறாா்.

Advertisement

திரும்பத் திரும்ப விவசாயிகளுக்கு கடன் கொடுத்து, அவற்றைத் தள்ளுபடி செய்வது சரியல்ல. அவா்கள் ஏன் கடனாளி ஆகிறாா்கள் என்பதை யோசிக்க வேண்டும்.

எல்லாப் பொருள்களுக்கும் அவற்றை உற்பத்தி செய்தவா்கள் விலை நிா்ணயம் செய்கிறாா்கள். ஆனால், விவசாயி தான் உற்பத்தி செய்த பொருளுக்கு விலை நிா்ணயம் செய்ய முடியவில்லை என்றாா் சீமான்.