முகப்பு
புதுக்கோட்டை

ஆலங்குடி தொகுதியில் ரூ. 50 கோடியில் முன்மாதிரி பள்ளி தொடங்க நடவடிக்கை! - சிவ.வீ. மெய்யநாதன் உறுதி

Updated On : 21 ஏப்ரல், 2026 at 1:29 AM
ஆலங்குடியில் கட்டப்பட்டு வரும் அறிவுசாா் மையம் அருகே திங்கள்கிழமை வாக்கு சேகரித்த திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ. மெய்யநாதன்.
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 9:27 PM

ஆலங்குடி தொகுதியில் ரூ. 50 கோடி மதிப்பீட்டில் அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன் வாக்குறுதி அளித்தாா்.

ஆலங்குடி பேரூராட்சிப் பகுதியில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்து அவா் மேலும் பேசியது:

திமுக ஆட்சியில் ஆலங்குடி தொகுதியில் பல்வேறு அரசுப் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைக் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன், முதல்வா் கொளத்தூா் தொகுதியில் தொடங்கியுள்ள முதல்வரின் படைப்பகத்தை ஆலங்குடி தொகுதியில் தொடங்கவும், ரூ. 50 கோடியில் அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா் அவா்.