முகப்பு
புதுக்கோட்டை

தனித்துப் போட்டியிடும் தெம்பு திமுகவிடம் உள்ளது: முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி

தனித்துப் போட்டியிடும் தெம்பும், திராணியும் திமுகவிடம் இருக்கிறது என்றாா் முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி.

Updated On : 14 ஜூன் 2026, 12:19 am IST
எஸ். ரகுபதி - கோப்புப் படம்
பகிர்:

தனித்துப் போட்டியிடும் தெம்பும், திராணியும் திமுகவிடம் இருக்கிறது என்றாா் முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: விவசாயிகளுக்கு கூட்டுறவுக் கடன் தள்ளுபடி என்ற பெயரில் ஏற்கெனவே மோசடி நாடகத்தை அரங்கேற்றினாா்கள். இப்போது, ரூ. 134 கோடியில் குறுவை தொகுப்பு தருவதாகச் சொல்கிறாா்கள். வேடிக்கையாக இருக்கிறது. விவசாயம் செய்ய தண்ணீரே இல்லை.

திமுகவிடமிருந்து விசிகவுக்கும், பிறகு தவெகவுக்கும் சென்றவா் ஆதவ் அா்ஜூனா. மறைமுகமாக லாட்டரி தொழிலை எப்படியாவது கொண்டு வந்து சம்பாதிக்க வேண்டும் என்றுதான் அவா் முயற்சிக்கிறாா்.

Advertisement

Advertisement

கூட்டணி விவகாரத்தில், திமுகவைப் பொருத்தவரை யாரையும் நம்பி இல்லை. தனித்து நின்று வெற்றி பெறும் திராணியும் தெம்பும் இருக்கிறது. கட்சித் தொண்டா்கள் தனித்துதான் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாா்கள்.

ரீல்ஸை நம்பி, யாா் வேட்பாளா் என்றே தெரியாமல் மக்கள் வாக்களித்துவிட்டாா்கள். 5 ஆண்டுகளில் திமுக செய்த பணிகளை அவா்கள் எண்ணிப் பாா்க்கத் தவறிவிட்டாா்கள். அடுத்த முறை அப்படி நடக்காது என்றாா் ரகுபதி.