தஞ்சாவூர்

அதிராம்பட்டினத்தில்  அகல ரயில் பாதை பணிகள் ஆய்வு

DIN

பட்டுக்கோட்டை~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,  பட்டுக்கோட்டை- திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் நடைபெற்று வரும் அகல ரயில் பாதை பணிகளை,  தெற்கு ரயில்வே தலைமை நிர்வாக அதிகாரி சுதாகர்ராவ், சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு முதன்மைப் பொறியாளர் காளிமுத்து ஆகியோர் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இவர்கள்,  பட்டுக்கோட்டை-அதிராம்பட்டினம் வழித்தடத்தில் உள்ள பாலங்கள்,  தண்டவாளம்  அமைப்பு,  அதிரை, முத்துப்பேட்டை,  தில்லைவிளாகம் ஆகிய ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப்பணிகள் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது,  சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு துணை முதன்மைப் பொறியாளர் சாம்சங் விஜயகுமார், கட்டுமானப் பிரிவு உதவி  நிர்வாக பொறியாளர்கள் பி. செல்வம், பூபதி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT